• Home
  • செய்திகள்
  • டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதிமுறைகள்… அக்டோபர் முதல் அமல்…!
செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதிமுறைகள்… அக்டோபர் முதல் அமல்…!

வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் ஒட்டுமொத்த விவரங்களையும் ஒரே அட்டையில் அறியக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு செய்ய புதிய முறைகள் அமலாக உள்ளது.

புதிய வாகன விதிமுறைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் இனி ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். இந்தச் சான்றிதழ் அட்டைகளில் ஒரு QR code கொடுக்கப்பட்டிருக்கும்.

இதன் மூலம் ஓட்டுனர் அல்லது வாகன உரிமையாளர் குறித்த முழுத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். 10 ஆண்டுகள் வரையிலான ஓட்டுநர் அல்லது வாகன உரிமையாளரின் அபராதங்கள் உள்ளிட்ட முழு வரலாறும் தெரியவரும்.

புதிய வாகன விதிமுறைகளின் முதல் நோக்கமே ஆன்லைன் டேட்டாபேஸ் உருவாக்குவதுதான். வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் ஒட்டுமொத்த விவரங்களையும் ஒரே அட்டையில் அறியக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அட்டையின் தரத்தையும் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அட்டையின் பின்புறத்தில் அவசர உதவி எண் வழங்கப்பட உள்ளது. வாகனம் மற்றும் வாகன ஓட்டியின் முழு வரலாறும் அந்த ஒரு அட்டையின் மூலமாகவே அறிந்துகொள்ள முடியும்.

Leave a Comment