• Home
  • இந்தியா
  • ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவம் பதிலடி
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதிகாலை 5.30 மணிக்கு சுந்தர் பனி பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.  சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்டார் ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல்காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.  

பாலகோட் தாக்குதல்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம் மீது கடந்த மாதம் 26-ம் தேதி இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியது. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

இந்த தாக்குதலில் இந்தியாவின் மிராஜ்-2000 ரக போர்விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில காலமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் அப்பகுதியில் சூழல் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லையில் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

Leave a Comment