• Home
  • அரசியல்
  • மார்க்சிஸ்ட் கம்யூ. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அரசியல் தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூ. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அசாம், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, திரிபுரா, மேற்கு வங்கம், லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை தொகுதிக்கு சு.வெங்கடேசனும், கோவை தொகுதிக்கு பி.ஆர்.நடராஜனும் போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Leave a Comment