• Home
  • விளையாட்டு
  • ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை நாளை அறிவிக்கப்படுகிறது
விளையாட்டு

ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை நாளை அறிவிக்கப்படுகிறது

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 11 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017) ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி உள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014) 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் (2008), டெக்கான் சார்ஜர்ஸ் (2009), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2016) ஆகிய அணிகள் தலா 1 முறையும் சமமான பலம் பெற்றுள்ளன.

12-வது ஐபிஎல் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதனால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

23-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் ஆட்சி மன்ற குழு ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றபடி மாற்றம் செய்து ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை நாளை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பொதுவாக ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் என்ற கணக்கில் தலா 7 ஆட்டம் நடத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் பாதுகாப்புக்காக இதில் மாற்றம் செய்யப்படும். ஒரே இடத்தில் பெரும்பாலான போட்டிகள் நடைபெறலாம்.

Leave a Comment