• Home
  • சினிமா
  • ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி?
சினிமா

ராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி?

இந்திய சினிமாவில் பெரும் சாதனை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘RRR’. உலக புகழ்பெற்ற இரண்டு சுந்தந்திர போராட்ட வீரர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் அல்லூரி சீதாராமாக ராம்சரண் நடிக்க, கோமரம் பீம்மாவாக ஜூனியர் என்.டி.ஆர்.நடிக்கிறார். இவர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கின்றனர். இவர்களுடன் சமுத்திரனியும் நடிக்கிறார்.

‘DVV என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 1920-களின் பின்னணியில் 300 கோடி ரூபாய் செலவில் உருவாகிறது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இப்படம் 2020 ஜூலை மாதம் 30-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

“RRR” என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கப்பட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைப்பை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹேஷ்டகுடன் ட்வீட் செய்யலாம். அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைபாக சூட்டுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜீவாவின் ‘கீ’ முக்கிய அதிகாரபூர்வ தகவல்!

admin

விஜய் ஆண்டனி படத்தில் இணைந்த சங்கீதா!

admin

விஜய் 64 இயக்குனர் யார் ?…மோகன் ராஜா – சிறுத்தை சிவா இடையே போட்டி ?

admin

Leave a Comment