• Home
  • அரசியல்
  • தமிழகத்தில் பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடையும் – ஜி.ராமகிருஷ்ணன்
அரசியல் செய்திகள் தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடையும் – ஜி.ராமகிருஷ்ணன்

பல்வேறு வகைகளில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், பணமதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி ஆகியவற்றால் கோவையில் ஐம்பதாயிரம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, 5லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தெரிவித்தார். கோவை மட்டுமின்றித் தமிழகத்தில் போட்டியிடும் தொகுதிகள் அனைத்திலும் பாஜக தோல்வியடையும் என்றும் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். கோவை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜன், கடந்த தேர்தலில் இருந்த மோடி ஈர்ப்பு இப்போது இல்லை என்றும், கோவையில் பாஜக வென்றால் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்கிற தந்திரம் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்தார்.

Leave a Comment