• Home
  • சினிமா
  • கார்த்தியை இயக்கும் ‘ரெமோ’ இயக்குனர்!
சினிமா

கார்த்தியை இயக்கும் ‘ரெமோ’ இயக்குனர்!

‘மாநகரம்’ படப் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘கைதி’. இந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வைரலானது. மாறுபட்ட கதைகளத்தில் உருவாகி வரும் ‘கைதி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கார்த்தி அடுத்து நடிக்க இருக்கும் கார்த்தியின் 19-வது படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்தது. தற்காலிகமாக ‘கார்த்தி-19’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம் இது.

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கீதாகோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்! கார்த்தி, ராஷ்மிகா மந்தனாவுடன் இப்படத்தில் ‘யோகி’ பாபு, பொன்னம்பலம் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

அதிக பொருட் செலவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்காக சென்னையில் மிக பெரிய ‘செட்’கள் அமைக்கப்பட்டு வருகிறது. எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்திற்கு விவேக் –மெர்வின் இசை அமைக்கிறார்கள்! ‘மாயா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ முதலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். படத்தொகுப்பை ரூபன் கவனிக்க, புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணிபுரிகிறார். கலை இயக்கத்தை ஜெய் கவனிக்கிறார். சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை பி.எஸ்.ராஜேந்திரன் மேற்கொள்ள, தயாரிப்பு நிர்வாகத்தை அரவிந்தராஜ் பாஸ்கரன் கவனிக்கிறார். 
#Karthi19 #Karthi #BakkiyarajKannan #RashmikaMandanna #SathyanSooryan #SRPrabhu 
#DreamWarriorPictures

Leave a Comment