• Home
  • அரசியல்
  • மக்‍களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை – பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு
அரசியல் இந்தியா செய்திகள்

மக்‍களவை தேர்தலில் போட்டியிடபோவதில்லை – பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு

மக்‍களவை தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என பகுஜன் சமாஜ் தலைவர் செல்வி மாயாவதி அறிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே, நாட்டின் பிரதமரைத் தேர்வு செய்வதில் இந்த மாநிலத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. பிரதமர் வேட்பாளர்களாக அறியப்படுகிறவர்கள் இம்மாநிலத்திலிருந்து போட்டியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் 80 தொகுதிகளில், 70-ல் வெற்றி பெற்று, பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இம்முறை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த, அம்மாநிலத்தின் பிராந்திய கட்சிகளான செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜும், திரு. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடியும் கூட்டணி அமைத்துள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்த தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தான் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்‍கை உள்ளபோதும், ஒரு தொகுதியில் வெற்றி பெறுவதைவிட, மாநிலத்தின் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். அதன் காரணமாகவே, தேர்தலில் போட்டியிடவில்லை என்று தாம் முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment