• Home
  • அரசியல்
  • “பிரதமர் மோடியின் பேரன் ராகுல் காந்தி!”- திண்டுக்கல் சீனிவாசன்
அரசியல்

“பிரதமர் மோடியின் பேரன் ராகுல் காந்தி!”- திண்டுக்கல் சீனிவாசன்

பிரதமர் மோடியின் பேரன் ராகுல் காந்தி என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை கேட்டு அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்து பேசினார். மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என பேசிய அவர், மோடியின் பேரனான ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என தெரிவித்தார். இந்திராகாந்தியின் பேரன் என்பதை தவறுதலாக குறிப்பிட்டு அவர் பேசியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சின்னப்பன் போட்டியிடும் சின்னப்பன், நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் கனிமொழிக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக கூறினார். இதனால் பரப்புரை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட, தவறை உணர்ந்த சின்னப்பன், தூத்துக்குடியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசைக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். 

Leave a Comment