தொழில்நுட்பம்

ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு தேதி அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் தனது 30-வது சர்வதேச டெவலப்பர் நிகழ்வுக்கான (WWDC 2019) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2019 ஆண்டின் டெவலப்பர் நிகழ்வு ஜூன் 3 ஆம் தேதி துவங்கி ஜூன் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கன்ரி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. முந்தைய ஆண்டுகளிலும் ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வு இதே இடத்தில் நடத்தப்பட்டது. 
சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஆப்பிள் இயங்குதளங்களான ஐ.ஓ.எஸ். 13, மேக் ஓ.எஸ். 10.15, வாட்ச் ஓ.எஸ். 6 மற்றும் டி.வி. ஓ.எஸ். 13 உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து அவற்றுக்கான அப்டேட்களை வழங்கும். புதிய ஐ.ஓ.எஸ். 13 இல் ஆப்பிள் டார்க் மோட் வசதியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் புதிய ஐபேட் இன்டர்ஃபேஸ் அப்டேட்கள், புதிய ஹோம் ஸ்கிரீன், ஃபோட்டோஸ், ஃபைல்ஸ், மெயில் ஆப்ஸ், புதிய எமோஜி உள்ளிட்டவையும் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்த புதிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.
ஆப்பிள் 2019 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் கீநோட் மேடையில் இருந்து புதிய ஆப்பிள் தகவல்கள், இத்தனை ஆண்டுகளில் மெஷின் லெர்னிங், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் புதிய அனுபவங்களை வழங்க தொட்ந்து பணியாற்றி வரும் டெவலப்பர்களை கொண்டாட இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நிகழ்வில் தொழில்நுட்ப வகுப்புகள், ஹேண்ட்ஸ்-ஆன் லேப்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்களின் கருத்தரங்கு உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. 2019 ஆப்பிள் டெவலப்பர்கள் நிகழ்வுக்கான (WWDC 2019) டிக்கெட்கள் மார்ச் 20 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. நுழைவு சீட்டு கட்டணம் முந்தைய ஆண்டுகளை போன்றே 1599 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,10,777) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 comment

Denice October 10, 2023 at 7:39 pm

It’s wonderful that you are getting thoughts from this paragraph as well
as from our discussion made at this place.

Reply

Leave a Comment